வசதி குறைந்த குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடுகிறது, ஏர்ஏசியா ஆல்ஸ்டார்ஸ்
சிப்பாங், 23 அக்டோபர் 2019 - ஏர்ஏசியா ஆல்ஸ்டார்ஸ் இன்று தங்களது அனைத்துலக தலைமையகமான ரெட்கியூவில் சிலாங்கூர் கிள்ளானில் உள்ள வாஜா இல்லத்தைச் சேர்ந்த 30 வசதி குறைந்த குழந்தைகளுடன் கொண்டாடியது.
ஏர்ஏசியா குழுமத் தலைவர் (ஏர்லைன்ஸ்) போ லிங்கம், ஏர்ஏசியா X மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பென்யமின் இஸ்மாயில், மற்றும் ஏர்ஏசியா மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மத் ஆகியோர் தனிப்பட்ட முறையில் அக்குழந்தைகளை வரவேற்று அலுவலகத்தைச் சுற்றிக் காட்டினர். அதைத் தொடர்ந்து, வாழை இலை மதிய உணவு வழங்கி, ஆல்ஸ்டார்ஸ் தத்தம் தன்முனைப்புக் கதைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
அந்த பகிர்வில், முதன்மை மூத்த அதிகாரி குகன் தங்கீசுரன், தான் எப்படி ஒரு சாதாரண டிஸ்பேட்ச் (despatch)- ஆக இருந்து இன்று கேடட் விமானி தேர்வில் தேர்ச்சி பெற்று தனது குழந்தை பருவ கனவை அடைந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதற்கிடையில் விமான பணிப்பெண் சங்கீதா நடராஜன் 35,000 அடி உயரத்திலிருந்து வழங்கிய சேவைக்காக விருது பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
பென்யமின் இஸ்மாயில் கூறுகையில், "ரெட்கியூவில் எங்கள் ஆல்ஸ்டார்ஸ் மற்றும் வாஜா இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளுடன் இத்தீவாவளியைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் அலுவலகத்தைப் பார்வையிட்டதன் மூலமுன், எழுச்சியூட்டும் ஆல்ஸ்டார்ஸ் கதைகளை செவிமடுத்ததன் மூலமுன் இக்குழந்தைகள் அவர்களைப் போலவே வாழ்க்கையில் முன்னேற, தத்தம் கனவுகளை மெய்ப்பட செய்ய முயல்வார்கள் என நம்புகிறோம்."
அந்நிகழ்வின் முடிவில், ஏர்ஏசியா அவ்வில்லத்தின் செயல்பாட்டையும் தொண்டு பணிகளையும் தொடர RM10,000 நிதி வழங்கி சிறப்பித்தது.
ஜனவரி 2008-இல் நிறுவப்பட்ட வாஜா இல்லம் ஒரு தொண்டு நிறுவனமாகும். இது 3 முதல் 17 வயது வரை உள்ள 30 அனாதை, வசதியின்மை அல்லது மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்கு அடைக்கலம் வழங்குகிறது. இந்த இல்லத்திற்கு உதவி செய்ய விரும்பும் பொதுமக்கள் wajahome07@gmail.co என்ற மின்னஞ்சல் வழி அல்லது எண் 18, லோரோங் தெமெங்குங் 18B, தாமான் செந்தோசா பெர்டானா, 41200 கிள்ளான், சிலாங்கூர் டாருள் ஏசான் என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.